ஆடி சுவாதியை முன்னிட்டு கிருஷ்ணன் கோயிலில் பால்குட ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2014 04:08
திருச்செந்தூர் ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 7.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதியாக வலம் வந்து கோயிலில் சேர்ந்தனர்.தொடர்ந்து அருள்மிகு ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் மற்றும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நண்பகல் அன்னதானமும், மாலையில் சாயரட்சை தீபாராதனையும் நடைபெற்றன.இதில் முன்னாள் பொதுப்பணித் துறை பணியாளர் நடராஜன், பொறியாளர் கி.நாராயணன், கி.வெங்கடேசன், மயில்மணி, சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.