பதிவு செய்த நாள்
05
ஆக
2014
05:08
செஞ்சி வட்டம் செவலபுரை திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீ மிதி திருவிழா தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை 20 நாள்கள் நடைபெற்றது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை, ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா, மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்றது.விழா நாள்களில் வில்வளைப்பு, ஜலக்கிரீடை, அல்லிமாலையிடுதல், திருக்கல்யாணம், சுபத்திரை மாலையிடுதல், துயில் உரிதல், தபசு மரம் ஏறுதல், கர்ணமோட்சம் உள்ளிட்டவை நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்வும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. தீ குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.திங்கள்கிழமை தர்மருக்கு மகுடம் சூட்டும் விதத்தில் பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை செவலபுரை மற்றும் தாதங்குப்பம், தாதிகுளம், ராமகிருஷ்ணாபுரம், சிறுவாடி, மேல்மண்ணூர், சித்தாத்தூர் ஆகிய 7 கிராம மக்கள் செய்திருந்தனர். 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இத்திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.