புதுச்சேரி: மொரட்டாண்டி பாதாள பிரத்தியங்கிரா காளி கோவிலில், நாளை பால் அபிஷேகம் நடக்கிறது. புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் பாதாள பிரத்தியங்கிரா காளி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி பால் குட அபிஷேகம் நாளை (8ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, அன்று காலை 9:30 மணிக்கு ஐயனாரப்பன் கோவில் வளாகத்திலிருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு, மதியம் 12:00 மணிக்கு காளிக்கு அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜனார்த்தனன் சுவாமிகள் செய்து வருகிறார்.