ராமநாதபுரம் : மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்கள் முளைப்பாரி விழா விமரிசையாக நடந்தது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், தேவிபட்டினம், நயினார்கோவில் உள்பட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா ஜூலை 29ல், முத்து பரப்பலுடன் துவங்கியது. நேற்று, காலை அம்மன் கரகம் வீதியுலா சென்றது. பெண்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து, அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில், அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. இக்கோயில்களில் ஆக.12ல், குளுமை பொங்கல் விழா நடக்கிறது. மண்டபம் சேதுநகர் சமயபுரம் முத்துமாரியம்மன் கோயில், யாதவர் தெரு மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா நிறைவையொட்டி குளுமை பொங்கல் விழா நடந்தது.