கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் வரலாறு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, முத்துமாரியம்மன் வரலாற்று நிகழ்ச்சியாக சின்னான் மோடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பருவதராஜகுல இனத்தை சேர்ந்தவர்கள் சாமிகளுக்கான வேடமணிந்து, இந்நிகழ்ச்சியை நடத்தினர். மலையாள தேசத்து மாந்திரீகரான சின்னான் மோடி வைப்பதை, காத்தவராயன் சாமி எடுக்கும் விதமான நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.