பதிவு செய்த நாள்
07
ஆக
2014
01:08
ஆத்தூர்: ஆத்தூர், திருவிழி அம்மன் கோவிலில் நடந்த, திருவிளக்கு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆத்தூர், ராணிப்பேட்டை, சிவாஜி தெருவில், திருவிழி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நன்மை, மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி, திருவிளக்கு பூஜை நடந்தது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, விளக்கு ஏற்றி வைத்து, ஸ்வாமிக்கு வழிபாடு செய்தனர். அப்போது, திருவிழி அம்மன், சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
* ஆத்தூர், கோட்டை சம்போடை வனத்தில் உள்ள, பெரியநாயகி, பச்சையம்மன் கோவிலில், மஹா சண்டி யாக பூஜை, 8ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று, காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பச்சையம்மன், பெரியநாயகி அம்மனுக்கு அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யாகவாசகசம், மகா கணபதி, மகா பூர்ணாஹூதி வேள்வி பூஜைகள் நடந்தது. பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகள் நீங்கவும், எதிரிகளை அழிக்கும் சண்டியாக வேள்வியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நாளை நவாஷரி, கணபதி, கன்னிகா, ஸூவாஸினி, பூர்ணாகுதி, தங்க கவசம் சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.