நங்கவள்ளி: தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி பிரவேசம் செய்தனர். தாரமங்கலம், கண்ணனூர் மாரியம்மன் கோவிலின் ஆடிப்பெருவிழா, கடந்த 4ம் தேதி துவங்கியது. வரும் 8ம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று, பக்தர்கள் அக்னி பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை தொடங்கி 11 மணி வரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், அக்னி பிரவேசம் செய்து, மாரியம்மனை வழிபட்டனர். மேலும், பொங்கல் வைத்தும், ஆட்டு கிடா மற்றும் சேவல்களை பலி கொடுத்தும், மாரியம்மனை ஸ்வாமி தரிசனம் செய்தனர்.