ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2014 01:08
உளுந்தூர்பேட்டை; அயன்வேலூர் கிராமத்திலுள்ள ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. சாகை வார்த்தல் திருவிழாவன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தீபாரதானைகளும் நடந்தன. பக்தர்கள் கூழ் குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தனர். அங்கு கூழை அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.