விழுப்புரம்: விழுப்புரத்தில் ராகவேந்திர சுவாமிகளின் ஆரா தனை விழா நடக்கிறது. விழுப்புரம் வண்டிமேடு ஸ்ரீமந்த்ராலயாவில் ராகவேந்திர சுவாமிகளின் ஆரா தனை விழாவை யொட்டி, வரும் 11ம் தேதி காலை சிறப்பு அபிஷேக, ஆராதனை யும், இரவு பல்லக்கு சேவா, ரதோற் சவம் நடக்கிறது. 12ம் தேதி காலை ராகவேந்திர சுவாமிகள் சுப்ரபாதம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், வெள்ளிக் கவசம் அணிவித்தல், கனகசேவை, விளக்கு பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது. 13ம் தேதி அபிஷேகம், குருஜி ஸ்ரீராகவேந்திராச்சாரின் அருளுரை நடக்கிறது.