திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு கரகம், சாகை வார்த்தல் நடந்தது. திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா கடந்த 1ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. ÷ நற்று கரகம் வீதியுலா சாகை வார்த்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் சக்தி கரகம் அலங்கரித்துமுக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் பால்குடம் மற்றும் கூழ்குடம் எடுத்து வந்தனர். பகல் 12.00 மணிக்கு கரகம் கோவிலை அடைந் தவுடன் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த கூழ் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வினியோகித்தனர். இரவு 10 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.