கிருமாம்பாக்கம்: கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் சுவாமி கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் சுவாமி கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று காலை 10.00 மணிக்கு சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, மாலை 5.00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.