பதிவு செய்த நாள்
13
ஆக
2014
02:08
காரிமங்கலம்: காரிமங்கலம், மந்தைவீதி மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், மந்தைவீதி மகாசக்தி மாரியம்மன் கோவிலில், அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து நடத்தும் திருவிழா, ஐந்து ஆண்டுக்கு பின், கடந்த, 5ம் தேதி கங்கை பூஜை, சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. கடந்த, 5ம் தேதி முதல், 11ம் தேதி வரை, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாரியம்மனை கொலுவில் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, 12ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், 12 மணிக்கு மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று, பொங்கல் வைத்து வழிபடுதலும், 14ம் தேதி காலை, 11 மணிக்கு மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தலும், 15ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மதியம், 12 மணிக்கு ராமசாமி கோவிலுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், 16ம் தேதி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை, 10.45க்கு மேல் மாரியம்மனை கங்கையில் விடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.