பதிவு செய்த நாள்
13
ஆக
2014
02:08
கோபி: ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதம், அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான மாடு, குதிரைகள் விற்பனைக்கு வரும். தென் இந்தியாவில், மிகப்பெரிய மாடு, குதிரை சந்தை, இதுவாகும். இந்தாண்டு திருவிழா, நேற்று துவங்கியது. கோபி, ஓடத்துறை நவலடி ஆட்டுப்பண்ணையில், உயர் கலப்பின ஆடுகள், குதிரைகளை, சிவா ஸ்டூடியோ உரிமையாளர் செல்வராஜ் வளர்த்து வருகிறார். இந்தாண்டு, குருநாத சுவாமி கோவில், திருவிழாவுக்கு, உயர் இன தலைச்சேரி, ஜமுனாபாரி, போயர், சிரோகி இன ஆடுகளையும், கத்தியவார் இன குதிரைகளையும், கொண்டு வந்துள்ளார். மலபார் என்றழைக்கப்படும் தலைச்சேரி ஆடு, இø றச்சி மற்றும் பாலுக்காக வளர்க்கப்படுபவை. 50 கி லோ வரையிருக்கும். உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஜமுனாபாரி, பால் இனமாகும். 60 முதல், 70 கிலோ எடை கொண்ட, இதன் பாலில் கெ ாழுப்பு சத்து, மூன்று முதல், 3.5 சதம் மட்டுமே. ஆப்பிரிக்கா இனத்தை சேர்ந்த போயர், தலை மற்றும் காதுகள் சிறப்பு நிறத்தில், சராசரி, 100 கிலோ எடையில் இருக்கும். சிரோகி, 100 முதல், 120 கிலோ எடை கொண்டதாகும். அந்தியூரில் நடக்கும் திருவிழாவுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுபற்றி, சிவா ஸ்டூடியோ செல்வராஜ் கூறியதாவது: எங்களது பண்ணையில் வளர்க்கப்படும், வெ ளிமாநில கலப்பின ஆடு, குதிரைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளேன். போயார் இன ஆடு, 25 ஆயிரம் முதல், 70 ஆயிரமும், தலைச்சேரி, 5,000 ரூபாய் முதல், 15 ஆயிரமும், சிரோகி, பத்தாயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய், வரை விலை கூறி வருகின்றனர். ஆடுகளை, ஒரே இடத்தில் வளர்ப்பதற்கு, கொட்டில் முறையே சிறந்தது. ஒரு ஏக்கர் நிலம் போதுமானது. அகத்தி, துபாபுல், வேலிமகால் ஆகியவற்றை வளர்த்து ஆடுகளுக்கு, பசுந்தீவனமாக கொடுக்கலாம். ஆடுகளின் எரு, சிறுநீர் ஆகியவை வீணாகாமல், தீவனப்பயிர் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். ஆடு வ ளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு, பண்ணை அமைத்து தருகிறோம். மேலும், கத்தியவர் இன குதிரையும், விற்பனைக்கு கொண்டு வந்துள்ளேன். இதன் விலை, 2.50 லட்சமாகும், என்றார்.