வில்லு பாட்டு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். புள்ளுவன் பாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா?
சபரிமலை ஐயப்ப சுவாமி சனிக்கிழமையில் பிறந்ததாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதன் காரணமாக ஜாதக ரீதியாக சனி தோஷம் உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். சிலருக்கு உடல்நிலை நான்றாக இருக்கும். ஆனால், உடலில் கோளாறு இருப்பது போல உணர்வு தோன்றும். இதை, பேய் பிடித்துவிட்டது, பிசாசு பிடித்து விட்டது என்ற மூட நம்பிக்கையின் பேரில், மந்திரவாதிகளிடம் போய் பணத்தை வீணாக்குவார்கள். இப்படி உடல்நிலை நன்றாக இருந்தும், மனதளவில் பாதிக்கப்பட்டவர்களும், சனிதோஷம் உள்ளவர்களும் சபரிமலை மாளிகைப்புறத்தம்மன் சன்னதியிலும் பாடப்படும் புள்ளுவன் பாட்டைக் கேட்டால், குணமாகி விடும் என்ற நம்பிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. கையில் உடுக்குடன் மலையாளத்தில் நாட்டுப்புறப்பாடல்களைப் போல் இதைப் பாடுவார்கள் இதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் பாடகர்கள். கேட்க மிக இனிமையாக இருக்கும் இந்தப் பாடல்களை நீங்களும், சபரிமலை செல்லும் போது கேட்டு வாருங்களேன்!