கொடையில் ஸ்ரீ சத்யசாய்பாபா நூறாவது பிறந்த நாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2025 05:11
கொடைக்கானல், கொடைக்கானல் ஏரிச் சாலையில் உள்ள சாய் ஸ்ருதியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்தநாள் வைபவம் நடந்தது. ஓம்காரம், சுப்ரபாதம், நகர் கீர்த்தனம் தொடக்கமாக அன்னதானமும், பகவானின் திருவுருவ காலாண்டர், வஸ்திரதானம் (கம்பிளி ) வழங்கப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பகவானின் அருளாசி பெற்றனர். விழா தொடக்கமாக நேற்று முன்தினம் கொடைக்கானலில் உள்ள 30 குதிரைகளுக்கு கொள்ளு அளிக்கப்பட்டது. காலை, மாலை இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவினை தமிழ்நாடு ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் செய்திருந்தனர்.