திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; ராட்சத கொப்பரை தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2025 05:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் ராட்சத கொப்பரை கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை அருணாச்சலம் ஆன்மீக சேவை சங்கம் சார்பில் நடந்த திருக்குடை ஊர்வலத்தில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், வேடமடைந்து நடனமாடி அவர்களை வெகுவாக அனைவரையும் கவர்ந்தது.