உங்கள் மகன் மதுவிற்கு அடிமையாகிஇருக்கலாம். மகள் பெற்றோருக்குகட்டுப்படாமல் காதல், ஆடம்பர நாட்டம் என சுற்றலாம். சிறுவயது குழந்தைகள் சிலர், ஒழுங்காகப் படிக்காமல் விளையாட்டே கதியெனக் கிடக்கலாம். சில குழந்தைகள் பிஞ்சிலேயே, ஒழுக்கமின்றிபேசலாம். இப்படிப்பட்ட பிள்ளைகளைப்பெற்றோர் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பார்கள். இவர்கள் தங்கள் மனசாந்திக்காகவும், முன்வினைப் பயனால் பிறந்த அந்த பிள்ளைகள் மனம் திருந்தி, உத்தம குணங்களுடன் விளங்கவும் திருச்சிஅருகிலுள்ள உத்தமர்சீலி கிருஷ்ணர் (வேணுகோபால சுவாமி) கோயிலுக்குச் சென்று வரலாம்.
இருப்பிடம்: திருச்சி-கல்லணை வழியில் 9 கி.மீ.,. சத்திரம்பஸ் ஸ்டாண்டில் இருந்துபஸ் உண்டு.