லலிதா பரமேஸ்வரியின் கையிலிருக்கும் கரும்பு வில் நம் மனதைக் குறிக்கிறது. அந்த வில்லிலிருந்து புறப்படும் கணைகள் மனதிலிருந்து எழும் ஆசைகளைக் குறிக்கின்றன. நம் மனதை அவளது திருவடியில் சமர்ப்பித்து சரண்புகுந்தால், புலனிச்சைகளோ உலகியல் வாழ்வின் தொல்லைகளோ நம்மை வாட்டாது.