பதிவு செய்த நாள்
21
ஆக
2014
01:08
செஞ்சி: செஞ்சி தாலுகா மேல்ஒலக்கூர் சக்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் செய்து ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. 19ம் தேதி மாலை 5மணிக்கு அனுக்ஞை, குருவந்தனம், விக்னேஷ்வர பூஜை, வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, சூர்ய பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச்சனையும், 9.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 10 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 10.30 மணிக்கு சக்தி விநாயகர் கோவில் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்தனர்.சக்தி விநாயகருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை பசுமலை தாசர் ராம்குமார் சோமையாஜூலு செய்தார்.