திண்டிவனம்: திண்டிவனம் அவரப்பாக்கத்தில் உள்ள யோக விநாயகர், நாகம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், புற்றுமண் எடுத்து வருதல், கும்ப அலங்காரத்துடன் முதற்கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளாக கோ பூஜை, அஷ்ட திரவிய ஹோமம், விசேஷ மூலிகை ஹோமங்கள் நடந்தது. காலை 9.40 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாசசாமி, யோக விநாயகர் கோவில் குருக்கள் நாகராஜ் குழுவினர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர்.