தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த சித்தலு õரில் பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வசந்த மண்டபத்தில் உற்சவர் அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஊஞ்சலில் எழுந்தருளினார். பக்தர்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். தர்மகர்த்தா கோவிந்தசாமி, பாஞ்சாலை, கண்ணன் பூசாரிகள் குமார், தமிழ்செல்வன், நாராயணன், ஜெயசங்கர், சிலம்பரசன் பூஜைகளை செய்தனர்.