விருத்தாசலம்: வேளாங்கண்ணி திருவிழாவுக்கு 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் விருத்தாசலத்திலிருந்து புறப்பட்டனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்க, விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் நேற்று புறப்பட்டனர். ஒரு மாதம் விரதமிருந்த பக்தர்கள், விருத்தாசலம் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில், பங்குதந்தை ஆ÷ ராக்கியதாஸ் தலைமையில் ஒன்று கூடி ஜெபித்தனர். அதைத் தொடர்ந்து அனைவரும் வேளாங்கண்ணி புறப்பட்டனர்.