சென்னை : ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில், சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, வரும் (29ம் தேதி) வெள்ளிக்கிழமை, காலை 9:௦௦ மணிக்கு, ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில் உள்ள, அருள்மிகு ரத்தினவிநாயகருக்கு, வெள்ளி கவச அலங்காரத்துடன், சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற உள்ளன.மாலை 6.30 மணிக்கு, விசேஷ அலங்காரத்துடன்,ரத்தின விநாயகப் பெருமான் வீதி உலா நடைபெறுகிறது.