பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 41 அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா நடந்தது. ராமேஸ்வரம், சாயல்குடி, சத்திரக்குடி, திருப்புல்லாணி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம் உள்பட 41 அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா ஆக., 19ல் முத்து பரப்பப்பட்டது. இதைமுன்னிட்டு தினமும் இரவு ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. ஆக., 26ல் குளம், கண்மாய், கடல் பகுதிகளில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக கோயில் வந்தனர். நேற்று காலை (ஆக.,27) அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்காக வீதியுலா சென்றது. பெண்கள் பொங்கல், மாவிளக்கிட்டு, அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செய்தனர். ஆடுகள் பலியிடப்பட்டன. நேற்று மாலை அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கப்பட்டது. இக்கோயில்களில் செப்., 2ல் குளுமை பொங்கல் விழா நடக்கிறது.