ராஜபாளையம் : ஆடி அமாவாசையொட்டி சதுரகிரி மலையில் அமைந்து உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் சென்றனர். வனத்துறையினர் சோதனையிட்டு, பாலித்தீன் கவர், மது பாட்டில்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையும் மீறி, வனப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் சிதறி கிடந்தன. இவற்றை அகற்றும் பணியில், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி., மாணவர்கள் ஈடுபட்டனர். மலையில் முகாம் அமைத்து, மூன்றுநாட்கள் தங்கி, 50 சாக்கு மூடைகளில் அந்த குப்பையை அகற்றினர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், வனத்துறை, கோயில் நிர்வாகம் செய்து இருந்தது.