பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
நாமக்கல்: நைனாமலை அடிவாரத்தில் அமைந்துள்ள, வருதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல் அடுத்த, திருமலைப்பட்டி, மின்னாம்பள்ளி, இருளப்பட்டி (நைனாமலை அடிவாரத்தில்) அமைந்துள்ள நைனாமலை வருதராஜ பெருமாள், பக்த ஆஞ்சநேயர், தும்பிக்கையாழ்வார் (விநாயகர்) மற்றும் சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகமாக நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு மங்கள இசை, வேதாபாராயணம், விக்னேஸ்வர பூஜை, மூலமந்திர மற்றும் மந்திரஹோமம், கடம் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 9.10 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத நைனாமலை வருதராஜ பெருமாள், பக்த ஆஞ்சநேயர், தும்பிக்கையாழ்வார் (விநாயகர்), கருடாழ்வார், சென்றாய பெருமாள், சக்கரத்தாழ்வார்,யோக நரசிம்மர், ராமானுஜர் மற்றும் மூலவர் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, அட்மா சேர்மன் பிரபாகரன், தலைவர் ராஜவேலு, செயலாளர் சின்னராஜா, அனைத்து ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.