பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
அரியலூர்: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, மகாபாரத கதை சொல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 22 நாட்கள் நடந்த நிகழ்ச்சிக்கு பின், அங்குள்ள ஏரிக்கரையில் தீமிதி திருவிழா நடந்தது. அதையொட்டி, கீழப்பழுவூர் செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில், பொதுமக்களுக்கு பானகம், நீர்மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. செட்டிநாடு சிமென்ட் ஆலையின் துணை தலைவர் சுந்தரமூர்த்தி தொடக்கி வைத்து, பானகம், நீர்மோர் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், துணை தலைவர் ரகுநாத்சிங், பொதுமேலாளர் அழகர்சாமி, மக்கள் தொடர்பு அலுவலர் ராமநாதன், கீழப்பழுவூர் பஞ்சாயத்து துணை தலைவர் தர்ம பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* கீழப்பழுவூர் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, கிரீன் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கிரீன் எடைமேடை நிறுவனங்கள் சார்பில், நீர்மோர் வழங்கப்பட்டது. கிரீன் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக தலைவர் கதிர் கணேசன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜியாலஜிஸ்ட் சந்திரசேகர், சுப்ரமணியன், ஜெகதீசன், கார்த்திக், ஐயப்பன், விஜயவேல், பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.