பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
துறையூர்: துறையூர் அருகே உப்பிலியபுரம் அடுத்த வெங்கடாசலபுரத்தில் விநாயகர், மாரியம்மன், செல்லாயி அம்மன், கருப்பண்ணசாமி பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவுக்காக, கோவில்களில் சுதை, வண்ண வேலைகள் செய்யப்பட்டிருந்தது. கடந்த, 25ம் தேதி, காவிரியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, பூஜை செய்யப்பட்டது. நேற்று முன்தினம், யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 4வது கால பூஜை செய்து கடம் புறப்பாடு நடந்தது. 6.30மணிக்கு கருப்பண்ண ஸ்வாமி கோவிலிலும், 7.30 மணிக்கு செல்லாயியம்மன் கோவிலிலும், 9.30 மணிக்கு விநாயகர், மாரியம்மன் கோவிலில் உள்ள கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்துவைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் புலிவலம் அருள்நந்தி சிவாச்சாரியார் சர்வசாதகம் செய்து வைத்தார். கோவில் தக்கார், கிராம பொதுமக்கள், விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.