அண்ணனுார் : ஆவடி, அண்ணனுாரில் உள்ள ராமர் கோவிலில் பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. ஆவடி சிவசக்தி நகரில் உள்ள ஸ்ரீராம் சத்சங்கம் ராமர் கோவிலில் பவித்ரோற்சவம் நாளை (29ம் தேதி) துவங்குகிறது. அன்று இரவு 7:௦௦ மணிக்கு அங்குரார்ப்பணம், வேத பாராயணம், பிரபந்த சாற்றுமுறை நடக்கின்றன.வரும்,30ம் தேதி, காலை 8:௦௦ மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. செப்., 1ம் தேதி வரை நடக்கும் உற்சவத்தில் தினசரி, வேத பாராயணம், திவ்ய தேசிக பிரபந்த சாற்றுமுறை, ஹோமம் உள்ளிட்டவை நடக்க உள்ளன.