பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
நுங்கம்பாக்கம்: மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் அய்யப்பன் குருவாயூரப்பன் கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன், உச்சி கோபுரத்திற்கு தங்க முலாம் பூசப்பட்டது. கடந்த ??ம் தேதி, கோவிலில் கும்பாபிஷேக வழிபாடு துவங்கி, தினமும் சுவாமிக்கு ஹோமங்கள், பூஜைகள் நடந்து வந்தன. மகா கணபதி ஹோமம், வேத பூஜைகளும் சிறப்பு வழிபாடு துவங்கியது. முதல் கட்டமாக குருவாயூரப்பனுக்கும், தொடர்ந்து, அய்யப்பனுக்கும் கும்பாபிஷேகம் வழிபாடு நடந்தது. அதில் பிரம்ம கலசாபிஷேகம், பரிகலசாபிஷேகம், உபதேவதை கலசாபிஷேகம், கும்பாபிஷேக பூஜைகள் மற்றும் உச்ச பூஜைகள் இடம் பெற்றன. சுவாமிக்கு அபிஷேக வழிபாடுகள் நடந்த போது, பக்தர்கள், சுவாமியே சரணம் என முழக்கமிட்டனர். பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், மகாதீபாராதனை மற்றும் அதழ பூஜையுடன் விழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை, அய்யப்பன் பக்த சபா செய்திருந்தது.