மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. அதில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று முன் தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 252 சுமங்கலி பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். அவர்களுக்கு மஞ்சள் குங்குமம், ஜாக்கெட் துணி வழங்கப்பட்டன. இன்று 1,008 கொழுக்கட்டை வைத்து சிறப்பு பூஜை செய்து, சமபந்தி விருந்து நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு விநாயகர் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் மற்றும் விழா குழுவினர் செய்து வரு கின்றனர்.