கோ+ இல் என்பதே கோயில், கோவில் என வழங்கப்படுகிறது. இதற்கு அரண்மனை என்பது பொருள். அதாவது உலகையே ஆளும் மன்னவனாகிய கடவுளின் இல்லம் என பொருள்படும். கோ, இல் ஆகிய இரு சொற்களும் இணையும்போது இடையில் ய், வ்’ என்ற இரண்டு மெய் எழுத்து சேர்ந்து விடுகிறது என்கிறது இலக்கண சூத்திரமான நன்னுõல். அதனால், இரண்டும் சரியானதே. எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.