சூலுார் : குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் அடுத்த காடாம்பாடி ஊராட்சி, குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்றது. இங்கு, 14ம் ஆண்டு விழா பூஜைகள் நடந்தது. அவிநாசி, பவானி, வெள்ளியங்கிரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பூஜிக்கப்பட்டது. காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா பூஜைகள் துவங்கின. 6.00 மணிக்கு அன்னபூரணி மற்றும் வலம்புரி விநாயகருக்கு தீர்த்த அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12.00 மணிக்கு சவுடேஸ்வரி அம்மனுக்கு திரவிய அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.