விழுப்புரம் : ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நாளை (6ம் தேதி) மகா சிரவணதீபம் ஏற்றப்படுகிறது.இதையொட்டி அன்று மதியம் 1:00 மணிக்கு மூலவர் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர் பெருமாள் புஷ்பம், துளசியால் அலங்கரித்து , சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு கருட கம்பத்தில் உற்சவ பெருமாள் எழுந்தருளித்தலும், 5:30க்கு மகா சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. ஏற்பாடுகளை அப்பகுதி பொது மக்கள் செய்து வருகின்றனர்.