நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாடன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் , நகராட்சி தலைவி மீனாதேவ் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பகல் 12 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு எட்டு மணிக்கு சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை 5 மணிக்கு சுவாமி ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.