காரைக்கால்: உலக அமைதிவேண்டி ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கஞ்சிக்கலயம் ஊர்வலம் நடந்தது. காரைக்கால் மேல்மருத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 33ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மையார் கோவிலிருந்து உலக அமைதிக்காவும், இயற்கை சீற்றங்கள் தணிய வைக்கவும், காவிரியின் நீர் வரத்து அதிகரிக்கவும் வேண்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக் கலய ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக புதியபஸ்நிலையம் அருகில் மேல்மருவத்தூர் ஆலயத்திற்கு சென்றனர்.