பதிவு செய்த நாள்
08
செப்
2014
12:09
கடலூர்: கடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 4ம் தேதி காலை 8 :00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. சிவபெருமானுக்கு சிவலிங்க வடிவமாகவே கோவில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு திருத்தேர் வடிவில் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு புதிய சிலைகளுக்கு கரிகோலம், புதிய சிலைகளுக்கு கண் திறத்தல், அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 5 மணிக்கு பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம்புறப்பாடு, 6.45 மணிக்கு ஆனந்த விநாயகர் மற்றும் அனைத்து விமானங்களுக்கும், 7.30 மணிக்கு ஆனந்த விநாயகருக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் சம்பத், அ.தி.மு.க, நகர செயலர் குமரன், நகராட்சி துணை சேர்மன் குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ராஜேந்திரன், செல்லசாமி, கண்ணன், நாகராஜன், கலைபாண்டி, பாலு, ராமதாஸ் மற்றும் வில்வராயநத்தம் வீட்டு வசதி உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் செய்திருந்தனர்.