பதிவு செய்த நாள்
11
செப்
2014
01:09
பவானி: பவானி, அந்தியூர் ரோட்டில் உள்ள பண்டார அப்பிச்சி மலையாள பகவதியம்மன் கோவில் பொங்கல் மற்றும் தேர்திருவிழா நடந்தது. கடந்த, 26ம் தேதி பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று காலை, 7.30 மணிக்கு காடையம்பட்டி மடப்பள்ளியில் இருந்து, பண்டார அப்பிச்சி சுவாமி தேர் பவனியாக புறப்பட்டு, கோவில் வந்து அடைந்தது. 9.30 மணியளவில் கன்னிமார்களுக்கு சிறப்பு பூஜை செய்து, பவானி ஆற்றில் முதலைக்கு சாதம் வைக்கப்பட்டது. மதியம், 1.30 மணிக்கு பொங்கல் வைத்தலும், அருள்வாக்கும் வழங்கப்பட்டது. இரவு, ஒன்பது மணிக்கு பெரும் பூஜை, வாத்தியம் முழங்க, வாணவேடிக்கையுடன் காடையம்பட்டியில் உள்ள மடப்பள்ளியை சென்று அடையும் நிகழ்ச்சி நடந்தது. நாளை (12ம் தேதி) மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. இவ்விழாவில், பவானி, காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம் உட்பட பல பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.