பதிவு செய்த நாள்
11
செப்
2014
01:09
காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தைவீதி ராஜகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நாளை நடக்கிறது. இதையொட்டி, மாலை, 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தேவகாண்ட்லா இளைஞர் மன்றத்தினர் செய்துள்ளனர்.
* காவேரிப்பட்டணம் மெயின்ரோடு தி விநாயகர் கோவிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நாளை நடக்கிறது. இதையொட்டி, மாலை, 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள சங்கடஹர கணபதிக்கு, இரவு, 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
* தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மாலை, 6 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளிகவசம் சாத்துதல் நடக்கிறது.
* தர்மபுரி நெசவாளர் நகர் விநாயகர், வேல்முருகன் கோவிலில், மாலை, 6 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் சிவானந்தம் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.
* தர்மபுரி குமாரசாமிப்பேட்டை விநாயகர் கோவிலில், அன்னசாகரம் விநாயகர் கோவில், அப்பாவு நகர் விநாயகர் கோவில், பாலக்கோடு ஞானபிள்ளையார் கோவில், வெண்ணாம்பட்டி விநாயகர் கோவில் உட்பட பல்வேறு விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.