Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தங்க விமான ... திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் உண்டியல் காணிக்கை! திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை நவநீத கிருஷ்ணன் கோயிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 செப்
2014
12:09

நாகப்பட்டினம்: நாகையில், பிரசித்திப்பெற்ற  நவநீத கிருஷ்ணன் சுவாமி கோயிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. நாகையில் ருக்மணி,  சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண சுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா 10 நாட்கள் விமரிசையாக  கொண்டாடப்படும். இவ்வாண்டுக்கான திருவிழா  கடந்த 8 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் சூர்யபிரபை, அம்ச, சேஷ,  கருடசேவை, ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்களில்  கிருஷ்ண பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முக்கிய  விழாவாக வரும் 16ம்தேதி திருத்தோரோட்டமும், கிருஷ்ண ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் மேலக்கோட்டை வாசலில் இருந்து நவநீத கிருஷ்ணன் சுவாமி கோயிலுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.

இதையொட்டி சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு புனிதநீர் மற்றும் சந்தனம் திருத்தேரில் தெளிக்கப்பட்டு மேலக்கோட்டைவாசல், பெருமாள் கோயில் மேலவீதி, வடக்கு வீதி வழியாக திருத்தேரை திரளாக பக்தர்கள் வடம்பிடித்து நிலையடிக்கு கொண்டு வந்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல்  அலுவலர் சிவக்குமார் மற்றும் நவநீத கிருஷ்ண சுவாமி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar