Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேசிங்கு ராஜனின் குதிரை சமாதி ... மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2014
01:09

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னமட்டாரப்பள்ளியில், நாளை, வீரஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி கிராமத்தில் உள்ள ராஜிலு மலை கோவிந்தராஜிலு சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, இன்று காலை, 6 மணிக்கு கணபதி பூஜை, கலச பூஜை, கங்கணம் கட்டுதல், நவக்கிரக ஹோமம், ருத்ரஹோமம், துர்கா ஹோமம், சுதர்சன ஹோமம், சண்முக ஹோமம், சப்தநாகஹோமம், ருத்ரபாராயணம், பஞ்ச சுக்தபாராயணம், லகுபூர்ணாபுதி ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்குகிறது.

அதை தொடர்ந்து, ஸ்வாமி சிலைகள் மகா அஷ்டபந்தனம் நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு தம்பதியர் பூஜை, கணபதி ஹோமம், சப்த நாக ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம், சுதர்சன ஹோமம், ராமஆஞ்சநேயர் ஹோமம், லகுபூர்ணாயுதி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து, நாளை காலை, 6 மணிக்கு, ஹோமங்களும், காலை, 7 மணிக்கு, சின்னமட்டாரப்பள்ளி கங்கம்ம கோவிலில் இருந்து, 101 பால் குடத்துடன், 158 கலசங்களுடன், பூ மிதித்து, சாமி மலைக்கு செல்லுதல், காலை, 10.30 மணி முதல், 12 மணிக்குள், 101 பால்குட மகா கும்பாபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். பகல், 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். மதியம், 2 மணிக்கு மலை மேல் திருப்பதி தெனாலி வாஸ்தவராலு நாகமணி பாகவதாரணி குழுவினரால், தெலுங்கு அரிகதை நடைபெறும். இரவு, 7 மணிக்கு, கோவிந்தராஜிலு சுவாமி ரத உற்சவம், வாணவேடிக்கை, கேரளா செண்டை மேளம், பம்பை, பலகை, சிலம்பாட்டம், கோலாட்டம் சிறப்பாக சுவாமி உற்சவம் ஊருக்குள் உலா வருகிறது. 14ம் தேதி காலை, 7 மணிக்கு சின்னமட்டாரப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும், கங்கம்மா, சவுடேஸ்வரி, காளியம்மா, பூஜைகள், ஸ்வாமி உற்சவம் இசை வாத்தியங்களுடன், மாவிளக்கு தட்டுகளுடன் ஊருக்குள் உலா வருகிறது. பகல், 12 மணிக்கு கங்கம்மா கோவில் அருகில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, சின்னமட்டாரப்பள்ளி கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar