Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில் ... திருப்தியில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் திருப்தியில் துணை ஜனாதிபதி சி. பி. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலுடன் விஸ்வரூப தரிசனம் செய் விஜய்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலுடன் விஸ்வரூப தரிசனம் செய் விஜய்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
11:04

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் விஸ்வரூப தரிசனம் செய்தார். கடலில் இறங்கி வழிபாடு செய்த அவர், மலர்கள் சாற்றி முருகனை வழிபட்டார்.


சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அதிகாலை 1.30 மணிக்கு மதுரை வந்தார். நள்ளிரவு முதலே ஏராளமான ரசிகர்கள் அவரை காண விமானநிலையத்தில் காத்திருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து காரில் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற அவர், பட்டு வேட்டி சட்டை அணிந்து திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இன்னும் சில நாட்களில் தேர்தல் முடிவு வர இருக்கும் நிலையில் அவரது இந்த திருச்செந்தூர் தரிசனம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வேல் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.


சத்ரு சம்ஹார யாகம்: எதிரிகளை வீழ்த்தி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டி, தமிழக வெற்றி கழகம் சார்பில், திருச்செந்துார் முருகன் கோவிலில் இன்று சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 


இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: எங்கள் தலைவர் விஜய், ஹிந்து மத சடங்குகள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். தான் தொடங்கும் எல்லா விஷயங்களையும் ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று, அவர் குறித்து கொடுக்கும் நேரத்தில் தான் செய்வார். கட்சி தொடங்கியதில் இருந்து, ஜோதிடரின் அனுமதி இல்லாமல் விஜய் எதையுமே செய்தது இல்லை. அதனால்தான், கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில், இவ்வளவு பெரிய இடத்துக்கு விஜய் வளர்ந்துள்ளார். இந்நிலையில், சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறவும், தனது அரசியல் எதிரிகளை வீழ்த்தவும் சில சடங்குகளை செய்ய வேண்டும் என ஜோதிடர் ஆலோசனை கூறியதை அடுத்து, விஜய் அதற்காக திட்டமிட்டார். அதன்படி, திருச்செந்துார் முருகன் கோவிலில், இன்று சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar