கீழக்கரை வாணியர் தெருவில் உள்ள அரியசுவாமி, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா நடந்தது. விழா செப். 5., காப்புகட்டுடன் விழா துவங்கியது. நேற்று காலை 9 மணி முதல் பால்குடம், மயில்காவடி, அக்னிசட்டி, அலகுகுத்தி காவடி ஆகிய நேர்த்திக்கடன்களுடன் பக்தர்கள் வீதியுலா வந்தனர். முன்னதாக மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டன. பின் மாலையில் கரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின் கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கீழக்கரை வாணியர் உறவின்முறைச்சங்கத்தினர் செய்திருந்தனர்.