பதிவு செய்த நாள்
16
செப்
2014
12:09
சென்னை :ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முதல் குழு, நேற்று, சென்னையில் இருந்து விமானம் மூலம், சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றது.தமிழகத்தில் இருந்து, இந்த ஆண்டு, 3,015 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில், 226 பெண்கள் உட்பட, 450 பேர் கொண்ட, முதல் குழு நேற்று மாலை, 5:40 மணிக்கு, சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.இதுபோன்று, வரும், 27ம் தேதி வரை, ஏழு விமானங்கள் சவுதிக்கு இயங்கப்படுகின்றன. இவர்கள் அனைவரும், அக்டோபர், 21ம் தேதி முதல், நாடு திரும்ப உள்ளனர். ஹஜ் பயணம் மேற்கொண்ட முதல் குழுவினரை அமைச்சர் அப்துல் ரஹீம், வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் மற்றும் அரசு அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.விமான நிலைய அதிகாரிகள் சார்பில், ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதுகுறித்து, தமிழ்மகன் உசேன் கூறுகையில்,இந்த ஆண்டு, தமிழக அரசு, ஹஜ் பயணிகளுக்காக, 40 லட்சம் ரூபாய், அவர்களுடன் செல்லும் தன்னார்வலர்களுக்கு, 22 லட்சம் ரூபாய் என, 62 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது, என்றார்.