பதிவு செய்த நாள்
16
செப்
2014
12:09
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளை சார்பில், திருப்பதி பிரம்மோற்சவத்தில், நாலாயிர திவ்விய பிரபந்த சேவை நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில், இந்து சமய அறநிலைய துறையின் கீழ், நெம்மேலி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை இயங்கி வருகிறது. மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தார் நாயக்கர், கடலோர தரிசு நிலத்தில் சவுக்கு பயிரிட்டு, அரசு பொருளாதாரத்தை ÷ மம்படுத்தியதன் பலனாக, அரசிடம், தானமாக நிலம் பெற்றார். வைணவ ஆன்மிகம் மற்றும் தர்ம செயல்களில் ஈடுபாடு கொண்டு, தன் சொத்தை, உயில் சாசனம் மூலம் அரசிடம் ஒப்படைத்து, அதன் வருவாயில், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், திருவிடந்தை, நித்யகல்யாண பெருமாள் கோவில், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆகியவற்றில், திருவிழா நடத்தி, அன்னதானம் வழங்கும்படி, உயிலில் குறிப்பி ட்டுள்ளார்.
அன்னதானம்: இதையடுத்து, அவரது சொத்தை பராமரித்து, விருப்பத்தை நிறைவேற்ற, மாமல்லபுரத்தில், அறக்கட்டளை இயங்கி வருகிறது. அதன் சார்பில், ஆண்டு தோறும், திருப்பதி பிரம்மோற்சவ விழாவில், நாலாயிர திவ்விய பிரபந்த சேவை, அன்னதான சேவை என, கடந்த 125 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, அங்கு, பிரம்மோற்சவம் துவங்கும் 26ம் தேதி முதல், அடுத்த மாதம் 4ம் தேதி வரை, தினமும் இச் சேவை நடைபெறும். இதையொட்டி, தினமும் பாகவதர்கள், பிரபந்த பாடல்கள் பாடுவர். பக்தர்களுக்கு, மூன்று வேளை அன்னதானம் வழங்கப் படும். அறக்கட்டளை, செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் ஊழியர்கள், இதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.