மதுரை : பிரதமர் நரேந்திர மோடியின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பா.ஜ., சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.பா.ஜ., நகர் தலைவர் முத்தணசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் குமாரலிங்கம், கார்த்திக் பிரபு, மாநில பிரசார பிரிவு துணைத்தலைவர் சசிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அர்ச்சனை செய்யப்பட்ட மலர்கள், குங்குமம் மற்றும் விபூதி கொண்ட பாக்கெட் தபால் மூலம் பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்டது.