பதிவு செய்த நாள்
19
செப்
2014
12:09
அன்னுார் : மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழா நாளை (20ம் தேதி) துவங்குகிறது. அன்னுார் அடுத்த மொண்டி பாளையத்தில் பிரசித்தி பெற்ற வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் மேலைத்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், திருவிழா விசேஷமாக நடக்கிறது.இந்த விழாவில் தமிழகத்தின் பல மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்கின்றனர். வரும் 20ம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு மகா அபிஷேகம், திருமஞ்சனம் சாற்றுதல் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு புஷ்ப பல்லக்கு அலங்காரத்தில் கருட வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, செப் 27, அக்.,4, அக்., 11, அக்., 18 ஆகிய நாட்களில் புரட்டாசி திருவிழா நடக்கிறது. சனிக்கிழமைகளில் அன்னுார், கோவை, புளியம்பட்டி, அவிநாசி மற்றும் திருப்பூரிலிருந்து மொண்டிபாளையத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.