பதிவு செய்த நாள்
26
செப்
2014
12:09
ஆர்.கே.பேட்டை: சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், நவராத்திரி உற்சவம், நேற்று, ஸ்தாபன திருமஞ்சனத்துடன் துவங்கியது. பத்மாவதி தாயார், உள்பிரகாரத்தில் அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரத்தில், சந்தான வேணுகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது. மூலவர் வேணுகோபாலன், பசுவின் மீது சாய்ந்து நின்ற கோலத்தில், புல்லாங்குழல் வாசித்தபடி, அருள்பாலிக்கிறார். பசு, கோபாலனின் பாதங்களை, நாவால் தடவிக் கொடுத்தபடி காணப்படும் சிற்பம், பிரபை உட்பட, ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு. வேறு எங்கும் இல்லாதபடி, கிருஷ்ணர், நான்கு கரங்களுடன், சங்கு சக்கரதாரியாக அருள்பாலிக்கிறார். நேற்று மாலை, நவராத்திரி உற்சவம், ஸ்தாபன திருமஞ்சனத்துடன் துவ ங்கியது. மாலை 6:00 மணிக்கு, ஊஞ்சல் சேவையும், 7:00 மணிக்கு உற்சவர் பத்மாவதி தாயார், உள்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.வரும் 3ம் தேதி வரை நடக்கும் உற்சவத்தில், பல்வேறு அலங்காரங்களில் அம்மன் அருள்பாலிக்கிறார்.