திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கொலு கண்காட்சி நடந்தது. திண்டிவனம் மரகதாம் பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 24 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மாலை 7:30 மணிக்கு அம்பாளுக்கு பூஜையும், தீபாராதனையும் நடந்து வருகிறது. விழாவில் கலந்து கொள்ளும் பெண் பக்தர்களுக்கு மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கபடுகிறது. பூஜைகளை ராதா குருக்கள், பாலாஜி குருக்கள் செய்து வருகின்றனர். தசமி அன்று 108 விளக்கு பூஜை நடக்க உள்ளது.