வேலூர்: நாராயணி பீடத்தில், கொலு பொம்மை வைக்கப்பட்டுள்ளது. வேலூர் அடுத்த திருமலைக்கோடி நாராயணி பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மை வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பொம்மைகள், கண்ணை கவரும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது. சக்தி அம்மா, கொலு பொம்மையை, நேற்று பார்வையிட்டார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கொலு பொம்மையை பார்த்துச் செல்கின்றனர்.